மருதநாயகம் பற்றி முன்பு எழுதியிருப்பேன். கிட்டத்திட்ட 28 மாதங்கள் ஒடிவிட்டன. இன்றைக்கு தான் இதுவரை வெளிவராத ஒரு மருதநாயகம் ட்ரைய்லர் பார்க்க கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது ஆறு வருடங்களுக்கு முன்பு ஒருவன் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறான் என்பது சாதாரண விஷயமில்லை. தசாவதார படபடப்புகள் அடங்குவதற்குள், கமல், அடுத்த படமான "மர்மயோகி" ஆரம்பித்து விட்டார். டிஸ்னியோடு அமர்க்களமாக 120 கோடி ரூபாய் பட்ஜெட் என்று சொல்கிறார்கள். கமலுக்கு மீண்டும் கடிதம் எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து மற்றவற்றினை ஒரம் கட்டி விட்டு, மருதநாயகம் பற்றி மீண்டும் சிந்தியுங்கள். உங்களுக்கான திறனையும், திறமைகளையும் தெரிந்தவர்கள் நாங்கள். ரசிகனின் மனசாட்சி என்றைக்கும் தப்பு செய்யாது.
இந்த ஒரு படம் சரியாக செய்தால் போதும். இது வேறெதோ தளத்திற்கு தமிழ்சினிமாவினை கொண்டு சொல்லும். சில ட்ரைய்லர்கள் பார்க்கும்போதே மனம் கணக்கு போடும், இது வேறு மாதிரியான படம் என்று [என்னளவில், அப்படி சரியாக கணித்தது "காதல் கொண்டேன்", "சென்னை 600028", "சித்திரம் பேசுதடி"]சிவாஜி 100 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது, சில பல்கலைக்கழகங்களில் "விருமாண்டி" பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஆக, மருதநாயகம் தப்பு பண்ணாது.
சனிமூலை - 009
4 months ago

1 comments:
மருத நாயகம் டிரைலர் பார்த்ததும் ஒன்றே ஒன்று தான் தோன்றியது. கமல் நடித்தால் இந்தப் படம் மருத நாயகன் ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது. கமல் என்று ஹீரோயிசத்திலிருந்து வெளி வருகிறாரோ அன்று தான் சிறந்த நடிகர் என சுட்ட முடியும் போல. பின்னர் உலக நாயகனென்பதெல்லாம் ஜால்ராக்களின் சத்தங்களில் இறந்து கொண்டிருக்கும் கலைஞனின் அடையாளப் பெயராகத்தாக் கருத இயலும்
Post a Comment