போன பதிவில் நான் எழுதியிருந்த distributed server farms பற்றி மணியன் கேட்டிருந்தார்.. எளிதாக சொல்ல வேண்டுமானால், cloud computing என்பது உங்களுடைய hard disk-இல் சேமிப்பதற்கு பதிலாக, செர்வரில் சேமிப்பது. வழக்கமாக இணைய தள பக்கங்கள் தான் செர்வரில் சேமிக்கப்படும். தொடர்ச்சியாக கீழிறங்கும் ஹார்ட்வேர் விலையினால் செர்வரில் சேமிப்பது என்பது எளிதாகிறது. இதன் முக்கியமான வசதி உங்களின் கோப்புகளை பாதுகாப்பான முறையில் எங்கே இருந்தாலும் பார்க்க முடியும் என்பது தான். நான் என்ன செய்தேன் என்பதை சொல்லிவிட்டு, பின்பு என்னென்ன முறையில் கோப்புகள், நம் ஆன்லைன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பார்ப்போம்.
எனக்கு எவ்விதமான உலாவியிலும் favorites கிடையாது. என்னுடைய favorites எல்லாமே டெலிசியஸ் (del.icio.us) தளத்தில் இருக்கிறது. நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் இந்த தளத்திலும் வலதுப்புறத்தில் நான் தமிழில் எழுதுவதற்காக சேமிப்பதை ஒரு டெலிசியஸ் தொகுதியாக பார்க்க முடியும். இதனால், எனக்கு தேவையான இணையதளங்கள் எதையும் நான் என்னுடைய கணினியில் சேமிப்பதில்லை. எல்லாமே டெலிசியஸில் இருக்கிறது. மொத்த தளங்களின் சேமிப்பு செர்வரில் இருக்கிறது.
என்னுடைய தனிப்பட்ட மற்றும் அலுவலக மின்னஞ்சல்களுக்கு நான் ஜிமையிலை தான் பயன்படுத்துகிறேன். நீங்கள் ஒரு சிறிய நிறுவனமாக (25 ஊழியர்களுக்கு குறைவாக) இருந்தால் கூகிளில் Google for Apps என்ற சேவையினை பயன்படுத்தலாம். இதன் சிறப்பு என்னவென்றால், உங்களுடைய இணையத்தள முகவரியிலேயே (உதா. narain@mycompany.com) உங்களால் மின்னஞ்சல் அனுப்ப முடியும். ஜிமையிலின் இன்னொரு வசதி, அதில் பாப் (POP) மற்றும் ஐமேப் (IMAP) வசதிகள் இருப்பதால், உங்களின் அவுட்லுக் அல்லது தண்டர்பேர்டு மின்னஞ்சல் மென்பொருளில், மொத்த மின்னஞ்சல்களையும் தரவிரக்க முடியும். ஆகவே இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், உங்களால் மின்னஞ்சல் பார்க்க முடியும். மொத்த மின்னஞ்சல்களும் செர்வரில் இருக்கிறது.
நான் பெரும்பாலும் பயன்படுத்தும் உலாவி "ப்ளாக் (Flock)" பயர்பாக்ஸ் உலாவியின் அடிப்படையினை பயன்படுத்தி செய்யப்பட்டது. பயர்பாக்ஸில் பயன்படுத்தும் பெரும்பாலான நீட்சிகளையும் (add-ons) இதில் பயன்படுத்த முடியும். 20 MB-க்கு குறைவாக உள்ள முக்கியமான கோப்புகளை நான் gSpace என்றொரு நீட்சி கொண்டு என்னுடைய இன்னொரு ஜிமையில் கிளையில் சேமித்து வருகிறேன். முதலில் உங்களின் ஜிமையிலிருந்து இன்னொரு மின்னஞ்சல் அக்கவுண்டினை நீங்களே உருவாக்குங்கள் (உதா. mybackup@gmail.com) பின்பு gSpace நீட்சியில், அந்த அக்கவுண்டின் பாஸ்வெர்டினை கொடுத்து சேமித்து விடுங்கள். அதன்பிறகு எப்போதெல்லாம், உங்களுக்கு ஒரு கோப்பு பின்னாளில் உபயோகப்படும் என்று நினைக்கிறீர்களோ அதை வெறுமனே Drag n Drop (DnD)செய்தால் போதுமானது. அதுவே ஒரு சேர்கோப்பாக உங்களூடைய பேக்-அப் அக்கவுண்டில் சேர்ந்து விடும். இது ஒரு வழி. பெரும்பாலான சிறிய கோப்புகள் செர்வரில் இருக்கிறதூ.
இன்னொரு வழி, இணையத்தில் இருக்கும் இலவச ஆனால் பாதுகாப்பான சேகரிப்பு தளங்கள் (storage accounts) நான் இப்போது பயன்படுத்துவது box.net. நீங்கள் இதில் ஒரு கணக்கினை தொடங்கினால் ஒரு ஜிபி வரை இலவசமாக கிடைக்கும். தேவையான கோப்புகளை வழக்கம்போல DnD செய்ய வேண்டியது தான். பெரும்பாலான பெரும் கோப்புகள் செர்வரில் இருக்கிறது.
எனக்கு எல்லா தூதுவ (Instant Messenger) சேவைகளிலும் ஒரு கணக்கு இருக்கிறது. தனித்தனியாக ஜி-டாக், எம்.எஸ்.என் மெசன்ஞர், யாஹூ மெசன்ஞர், ஏ.ஓ.எல், ஐ.சி.க்யு என பதிவிறக்கி உங்களின் கணினியினை சொதப்புவதை விட மீபோ (Meebo) பயன்படுத்துங்கள். மீபோ என்பது எல்லா தூதுவ சேவைகளையும் உள்ளடக்கிய ஒரு சேவை. இதனை வெறும் உலாவியிலேயே பயன்படுத்த முடியும். இதனால் தேவையற்ற ஸ்பாமர்களை தவிர்க்கலாம். எந்த தூதவனில் இருக்க வேண்டுமோ, அதில் மட்டும் இருந்து விட்டு மற்றவற்றில் இல்லாமல் invisible mode-இல் இருக்க முடியும். தேவையில்லாத எதுவும் உங்களின் கணினியில் இல்லை, அதனால் க்ராஷாகும் வாய்ப்புகள் குறைவு.
நார்ட்டன் ஆன்டி வைரஸ் என்பது அடுத்த சித்ரவதை. ஆனாலும், எல்லா கணினிகளுக்கும் ஆன்டி வைரஸ் தேவை. எல்லாராலும், நார்ட்டன் வாங்க முடியாது. நான் என்னுடைய புது கணினியில் வந்த 60 நாள் இலவச நார்ட்டனை கழட்டி விட்டு, விண்டோஸின் லைவ் கேர் சேவையினை உபயோகிக்கிறேன். முதல் முக்கியமான விஷயம், இது 90 நாட்களுக்கு இலவசம். இன்னொரு மூன்று கணினிகளுக்கும் சேர்த்து வருடத்திற்கு ரூ.2000 க்கு குறைவாகவே ஆகும். ஆக ஒவ்வொரு முறையும் நார்ட்டனை re install பண்ணக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்புவது மட்டுமல்லாமல், பல்வேறு விதமான ரிஜிஸ்டரி சித்ரவதைகளிலிருந்தும் தப்பலாம். லைவ் கேர் என்பது ஒரு இணைய சேவை, பெரும்பாலான தீர்வுகள் செர்வரில் இருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் உங்கள் கணினி க்ராஷ் ஆனால், இருக்கக்கூடிய பெரும் பிரச்சனை நீங்கள் சேமித்து வைத்திருந்த பல்வேறு விதமான் பாஸ்வேர்டுகள், மற்றும் கணக்கு எண்கள் தொலைந்து போகக்கூடிய பிரச்சனை. இப்போது பெரும்பாலான இணையத்தளங்கள் ஓபன் ஐடி என்றொரு முறையினையும் பழைய கணக்கியல் முறையோடு சேர்த்து தருகின்றன. எப்படி எங்கே போனாலும், உங்களுக்கு ஒரே ஒரு பெயர் இருக்கிறதோ, அதே போல உங்களின் ஆன்லைன் வாழ்க்கையின் ஒரே பெயர் தான் ஒபன் ஐடி. ஒபன் ஐடி என்பது உண்மையில் ஒரு உரல். இதன்மூலம், எல்லா பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைத்திருக்கக்கூடிய சித்ரவதையிலிருந்து தப்பிக்கலாம். இன்னொரு வழி பயர்பாக்ஸில் எல்லாவற்றையும் சேமித்து வைத்திருந்தால் FEBE - Firefox Extension Backup Extension என்றொரு நீட்சி இருக்கிறது. இதன்மூலம் எல்லாவற்றையும் ஒரு பேக் அப் எடுத்து அதை gSpace-இல் தட்டி விடுங்கள். நாளை க்ராஷானாலும், முதலில் பயர்பாக்ஸ் அல்லது ப்ளாகினை நிறுவிவிட்டு FEBE நீட்சியினை நிறுவி, சேமித்த பேக்-அப்பினை re-install செய்தால் உங்களுடைய பழைய எல்லா நீட்சிகள், பாஸ்வெர்டுகள் எல்லாம் நிறுவப்பட்டு விடும். எல்லாம் செர்வரோச்சவம்
ட்விட்டர் அல்லது பொவுன்ஸ் என்பது குறுஞ்செய்தி போல, குறும்பதிவு செய்யும் சில தளங்கள். நன்றாக சாப்பிட்டு விட்டு, ஏப்பம் விடும் எல்லா நாட்களிலும், இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒரு கணக்கினை தொடங்கி நீங்கள் இன்றைக்கு, இந்த வாரம், இந்த மாதம் செய்ய வேண்டிய, செய்யக்கூடிய, செய்ய நினைத்திருக்கக்கூடிய வேலைகளை சும்மா தட்டிவிடுங்கள். ட்விட்டரில் இருக்கக்கூடிய இன்னொரு வசதி, ட்விட்டர் கணக்கினை உங்களுடைய ஜி-டாக்கில் ஒரு தோழனாக சேர்த்து கொண்டு செய்திகளை தட்டி விடலாம். நான் காலையில் வந்தவுடன் செய்வது எனக்கான தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் செய்ய நினைப்பதை தட்டி விடுவது. நாளைக்கு ஒரு வேளை ஏதாவது ஆனாலும், உங்களால், எங்கே வேண்டுமானலும் இருந்து கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை பார்க்க முடியும். பெரும்பாலான வேலை மதிப்பீடுகள், திட்ட அமைவுகள் செர்வரில் இருக்கிறது.
இதைப் போல ஜிமைல் உபயோகிப்பாளாரானால், கூகிள் கேலண்டர் உபயோகித்து அதன் settings-இல் உங்களின் செல் பேசி எண்ணினை கொடுங்கள். எல்லா சந்திப்புகளையும் ஜிமைல் கேலண்டரில் போட்டு, அதை உங்களுக்கே குறுஞ்செய்தி மூலம் நினைவுறுத்த செய்ய முடியும். இந்தியாவில் இக்குறுஞ்செய்திகள் இலவசமே. ஆகவே எல்லா சந்திப்புகளையும் கேலண்டரில் போடுங்கள். நாளை ஒரு வேளை, உங்களுக்கு நாம் என்ன கடந்த நாலு மாதமாக கிழித்தோம் என்று பார்க்கவேண்டுமானால், இதை பார்த்தால் போதுமானது. எல்லா சந்திப்புகள், திட்ட முனைவுகள், கால நேர மாற்றத்தோடு வரும் நிகழ்வுகள் எல்லாம் செர்வரில் இருக்கிறது.
இவையெல்லாம் உபயோகிக்க தொடர்ச்சியான இணைய இணைப்பு தேவை. நான் இவையெல்லாம் செய்வது disaster recovery strategy மட்டுமல்ல, முக்கியமாக நானொரு நாடோடி. மாதத்திற்கு பாதி நாட்கள் ஊர் சுற்றும் வாய்ப்புகள் இருப்பவன். அவ்வாறான நேரத்தில் என்னுடைய இணையத்தள இணைப்போ, நான் தங்கியிருக்கக்கூடிய ஹோட்டலில் கனெக்டிவிடியோ சரியில்லையெனில், சடாலென சாலையில் இறங்கி கிடைக்கக்கூடிய ஒரு ப்ரெள்சிங் சென்டரில் உட்கார்ந்து கொண்டே எல்லா வேலைகளையும் முடித்து விடுவேன். இதனால் எனக்கு என்னுடைய மடிக்கணினி தான் எல்லா கோப்புகளின் உறைவிடம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஒரு நாள் வரும், உங்களுடைய கைரேகை மட்டுமிருப்பின் உலகின் எந்த கணினியிலும் உங்களின் எல்லா விவரங்களையும் பார்க்க முடிவதாக, இது வெறுமனே ஐசக் அஸிமோவின் sci-fi கதையல்ல. இன்னமும் ஐந்து வருடங்களில் நடைமுறை சாத்தியப்படும் என்று நம்புகிறேன்.
வானம் எப்படி எல்லா இடங்களிலும் சொந்தமாக இருக்கிறதோ, அதைப் போல ஏன் நம்முடைய computing activities-ம் இருக்கக்கூடாது என்பதில் தொடங்கியது தான் என்னுடைய வழிமுறை. இன்னமும் போக வேண்டிய தூரங்கள் நிறைய இருக்கிறது, ஆனாலும் இந்த பயணத்தில் முதல் சில அடிகளை எடுத்து வைத்திருக்கிறேன் என்பதில் தான் இதன் முக்கியத்துவமும், பயன்பாடும் தெரிகிறது. தெரிய ஆரம்பித்திருக்கிறது.
நான் இப்போது காத்துக் கொண்டிருப்பது மைக்ரோசாப்ட்டின் Unified Communication Strategy பற்றிய பொது சிந்தனையும், மூன்று மாதங்களுக்கு முன்பு கூகிள் கையகப்படுத்திய Grand Central என்கிற சேவையின் உலகளாவிய பயன்பாட்டினையும். இவை வந்தால், ஒரே ஒரு எண் போதும் உங்களின் செல்பேசி, அலுவலக தொலைபேசி, வீட்டு தொலைபேசி, உங்களின் VoIP கணக்கு எண் என எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க.
தற்போதைக்கு உங்களுடைய செல்பேசியில் ப்ளூடூத் வசதி இருப்பின் அதன்மூலம் மொத்த எண்களையும் உங்களின் கணினிக்கு மாற்றி உங்களின் மின்னஞ்சலில் ஒரு .vcf பேக் அப் வைத்துக் கொள்ளுங்கள். கணினி க்ராஷ் ஆனால் மட்டுமல்ல, செல்பேசி தொலைந்து போனாலும், தகவல்களை மீட்டுக் கொள்ளலாம்.
மேலே சொன்ன தகவல்கள் மட்டுமல்லாமல், பல்வேறு விதமான சேவைகளை பயன்படுத்துகிறேன். கீழ் கண்ட தளங்களிலிருந்து உங்களுக்கு தேவையான சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
கோப்புகளை சேமிக்க - அமேசான் எஸ்3
முகவரிகள், தொலைபேசி எண்கள் சேமிக்க - ப்ளோக்ஸோ, ஹைரைஸ்
வலைப்பதிவுகளை படிக்க - கூகிள் ரீடர், ப்ளாக்லைன்ஸ்
வேர்டு, எக்ஸெல், பவர்பாயிண்டு பயன்படுத்த - கூகிள் ஆபிஸ், சோஹோ ஆபிஸ்
ப்ரோஜெக்டு பற்றி கலந்துரையாட - பேஸ்கேம்ப்
உலகம் முழுக்க ஓசியில் பேச - ஸ்கைப், கிஸ்மோ
சேல்ஸ், ப்ரொடக்ஷன் மற்றும் வணிக விவரங்களை பகுத்தறிய - சேல்ஸ்போர்ஸ், டேபுள் டிபி
வரவு செலவு கணக்கு எழுத - எக்ஸ்பென்சர்
சனிமூலை - 009
4 months ago

4 comments:
நன்றி நாராயண். மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தின் முழுவீச்சையும் பயன்படுத்துகிறீர்கள்.. மடிக்கணினி காணாமல் போனால்கூட கவலையில்லை.
Remote serverஇல் நமது தரவுகளின் பாதுகாப்பு மற்றும் Privacy பற்றி கவலை இல்லையா ?
மணியன், பாதுகாப்பு மற்றும் தனித்தன்மை உள்ளடக்கியதே மேற் சொன்னது. ஆன்லைன் வணிக வங்கிகளின் SSL Serverகளுக்கு இணையான தொழில்நுட்பம் தான் நான் உபயோகிக்கும் பலவற்றிலும் இருக்கிறது. உதாரணத்திற்கு இப்போது நான் எழுதும் பின்னூட்டம் கூட https:// செர்வரில் ஒடுகிறது. இதில் பாதுகாப்பும், தனித்தன்மையும் மற்றும் முழுமையான உத்தரவாதத்தையும் [99.9% uptime gurantee] பெற முடியும்.
இவ்வாறு செயல்படுவதில் பிரச்சனைகளே இல்லையென்று சொல்லமுடியாது. பிரச்சனைகளும் இருக்கிறது. ஆனாலும், பயன்பாட்டின்படி பார்த்தால், அவை பிரச்சனைகளை விட மேலானதாக இருப்பதால் என்னளவில் கவலையில்லை.
மற்றபடி ஒரு டிவிடி பேக்-அப் எடுப்பது என்பது எல்லா காலகட்டத்திலும் பாதுகாப்பான விஷயம்
சூப்ப்பரோ சூப்பர்.....
நிசமாகவே பல பயனுள்ள தகவல்கள்
நாரயண்,
இந்த கட்டுரை ஆங்கிலத்தில் கிடைக்குமா
அப்படி கிடைக்கும்பட்சத்தில் அதை அலுவலக வெளீயிடுகளில் வெளியிட உங்கள் அனுமதி தேவை
Post a Comment